அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே
ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே
ஆறுதல் தருபவர் இயேசுவே
– அடைக்கலம்
1. பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும்
பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே
பாதை மாறி பயணம் செய்வோர்க்கும்
பரிசுத்த தேவனே அடைக்கலம் (2)
தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (2)
தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (2)
கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று
கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம்
2. மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என்
மன்னவன் இயேசுதான் அடைக்கலம்
கண்ணீரை சிந்தியே கலங்குவோர்க்கு
கர்த்தரின் கிருபையே அடைக்கலம்
வஞ்சக சாத்தானின் வலையில் விழாமல்
நெஞ்சிலே அணைத்திடும் அடைக்கலம்
மிஞ்சிடும் பாரமா …. ஓ.ஓ.ஓ அஞ்சிட வேண்டாமே
தஞ்சமே இயேசு உன் அடைக்கலமே (2)
கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்ற
கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம்;
3. எத்தனைக் காலங்கள் நான் காத்திருந்தேன் என்
இயேசுவே உம்மை நான் காண்பதற்கு
ஏழை என் வாஞ்சைகள் தீர்ப்பவரே
ஏன் இன்னும் தாமதம் நானாறியேன்
காலங்கள் மாறலாம் ஆ…ஆ..
கவலைகள் தீரலாம்
கர்த்தரின் கரத்தினில் நானிருந்தால்
உம்மிடம் வருவோரைத் தள்ளிடமாட்டீரே
உம்மைப் போல் அடைக்கலம் எவருமில்லை– அடைக்கலம்

Leave a Comment