அணைக்கும் கரங்களுண்டு -Anaikum karangal undu

அணைக்கும் கரங்களுண்டு
ஆற்றும் நேசருண்டு
வேஷமான மனித உலகில்
தேற்றும் இயேசுவுண்டு – 2
1. அன்பின் பஞ்சத்தினால் அலைந்து திரிந்தேனே
மிஞ்சும் சோகத்தினால் நெஞ்சம் துடித்தேனே
அன்பர் அன்பு துன்பம் நீக்க
இன்பம் கண்டேனே
2. அள்ளி அணைத்திடுவார் அணைத்து
முத்தம் செய்வார் துள்ளி தூக்கிடுவார்
தோளில் சுமந்திடுவார் இதய ஏக்கம் தீர்க்கும்
தேவன் இயேசு நல்லவரே
3. அப்பா என அழைக்க இப்போ ஓடி வந்தேன்
தாயின் மடி தவழும் சேயாய் மாறிடுவேன்
மார்பில் சாய்ந்து கவலை மறப்பேன்
ஆனந்தம் கொள்வேன்
4. உம்மையன்றி என்னை தேற்ற யாருமில்லை
சுற்றத்தாரின் அன்பு சூன்யமாகிடுதே
தவிக்கும் உள்ளம் தாகம் தீர
உம்மில் மகிழ்ந்திடுவேன்
5. ஆதி அன்பு தனில் தினமும் திளைத்திடவே!
ஆவி ஈந்தருளும் அனலை மூட்டிவிடும்
வெள்ளம் திரண்ட தண்ணீரும்
அன்பை அணைக்க முடியாதே

Leave a Comment