அன்பின் குரல் உன்னை – Anbin Kural unnai lyrics

அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது
ஆறுதல் அளிக்க துடிக்கின்றது
நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம்
மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் – அன்பின்
சரணங்கள்
1. துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ
வியாதியோ வியாகுல வேதனையோ
சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு
அவர்தாம் ஆண்டவராம் இயேசு – அன்பின்
2. உந்தனின் மீறுதல் பாராதவர்
உந்தனக்கரமங்கள் எண்ணாதவர்
உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம்
இயேசு அழைக்கும் அன்பின் குரல் – அன்பின்
3. பாவியான உன்னைத் தள்ளிடாமலா்
பாவத்தை வெறுத்த பாவநாசர்
பாவியாம் உன்னை மீட்டிடவே
பாசமாய் அழைக்கும் அன்பின் குரல் – அன்பின்
4. உன்னில் காணப்படும் சுயநீதி
அதை அழித்தாலே வரும் தேவநீதி
தன்னிடம் உன்னை சேர்த்துக்கொள்ள
தயவாய் அழைத்திடும் அன்பின் குரல் – அன்பின்

Leave a Comment