இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர்
நான் தாழ்ச்சியடையேனே

புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர்

நல்ல மேய்ச்சலிலே
நடத்தி செல்பவரே
எந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரே
சுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்
முறிந்த என் கால்களை பெலனாக்குவீர்

1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல்
அலைந்தேன் வழிதவறி தவித்தேன்
இருளில் தடுமாறி திகைத்தேன்
நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர்
தோள்களில் சுமந்தே கொண்டு போனீர்
கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே

2. தூற்றிய மாந்தர் முன் ஆற்றிய எந்தனை
தூக்கியே நிறுத்தினீரே
ஊற்றியே உந்தனின் ஆவியை
என்னிலே மகிழ்ந்திட வைத்தவரே
நான் மரித்து இருந்தேன் உம் ஜீவன் தந்தீர்
சுத்தரே உம்மையே துதித்திடுவேன்

Leave a Comment