பல்லவி
இரட்சணிய சேனை வீரரே
யுத்தம் செய்தால் ஜெயங் காணலாம்
அனுபல்லவி
அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தை
அணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே!
சரணங்கள்
1. ஆவியின் கட்கம் வேதமே! அதில்
ஆரோக்கிய சுகபோதமே!
பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழ
தேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய
2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்று
யுத்தம் செய்யும் ஊக்கமாய்;
சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தை
சந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய
3. என்ன வந்தாலும் அஞ்சிடோம் – துன்பம்
இன்பத்தினால் வெல்லுவோம்!
வெண்ணங்கி சங்கீதம் பொன்முடி மோட்சத்தில்
வேண்டுமாகில் இங்கே சாந்தனை ஊக்கமாய் – இரட்சணிய