உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,
உம்மை நம்பியே நான் வழ்கிறேனே
வெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2

1. உம்மை நோக்கி காத்திருக்கும்
ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,
முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும்
மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2
என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு
மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2

2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து
திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை
எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2
உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

Leave a Comment