என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்
என்றனென்றும் நீரே ஆனீரே

எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்தி
என்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை

1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரே
என் கேடகமும் அரணும் ஆனவர் நீரே
எனக்காக சிலுவையை அன்பாய் சுமந்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரே
என் சுகமும் ஜீவனும் பெலனும் நீரே
எனக்காக அடிமை கோலம் எடுத்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

Leave a Comment