கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics

கானானை சேர போறோம் வாரீகளா
அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா?

பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்கு பேராம் – 2 – கானா

செங்கடல் வழியில் வரும்
யோர்தனில் கரை புரளும்
விசுவாசம் இருந்தாலே
எளிதாக கடந்திடலாம்
எரிகோ எதிர்த்து நிற்கும்
எதிரிகளும் சூழ்ந்திடுவர்
யெகோவா நிசி இருக்க
பயம் ஏதும் தேவை இல்ல

அல்லேலூயா பாடியே நாம்
ஆனந்தமாய் கடந்திடலாம் -2 – கானா

வனாந்திர வழிகள் உண்டு
வருந்திடவே தேவை இல்ல
அக்கினியாய் மேகமாய்
நம்மோடு வரும் தேவன் உண்டு
வானத்து மன்னாவால்
போஷித்திடும் தகப்பன் அவர்
கன்மலையை பிளந்து நம்
தாகம் தீர்க்கும் தாயும் அவர்

அதிசயம் அவர் பெயராம்
ஆச்சரியம் அவர் செயலாம் -2 – கானா

வானத்தில் எக்காலம் ஊதிடும்
ஓர் நாள் வருதே
மேகத்தில் தூதரோடு
இயேசு ராசா வந்திடுவார்
நல்லதோர் போராட்டம்
போராடி ஜெயித்திடுவோம்
நித்திய ஜீவன் பெற்று
பரலோகம் சேர்ந்திடுவோம்

அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தம் ஆகிடுவோம் -2 – கானா

Kanaanai Sera Porom Vaarigalaa
Ayya Vaarigalaa? Amma Vaarigalaa ?
paalum theanum odum naadam
Paralogam Athuku Paeraam -2

Sengadal Vazhiyil Varum
Yordhanil Karai Puralum
Visuvasam Irundhalae
Yelithaga Kadandhidalam
Erigo Edhirthu Nirkkum
Yethirigalum Sozhlndhiduvar
Yegova Nissi Irukka
Bayam Yedhum Thevai illa
Alleluya paadiyae Naam
Aanandhamai Kadandhidalam -2

Vanandhira Vazhigal Undu
varunthidave Thevai illa
Akkiniyaai Megamaai
Nammodu varum Devan Undu
Vaanaththu Mannaavaal
Poshithidum Thagappan Avar
Kanmalaiyai Pilandhu Nam
Thaagam Theerkkum Thaayum Avar
Adhisayam Avar Peyaraam
Aachariyam Avar Seyalaam -2

Vaanathil Ekkaalam
Oodhidum Oar Naal Varudhae
Megathil Thoodharodu
Yesu Rasa Vandhiduvaar
Nalladhor Poraattam
Poradi Jeyithiduvom
Niththiya Jeevan Pettru
Paralogam Serndhiduvom
Andha Naal Nerungidudhae
Aayatham Aagiduvom – 2

https://www.youtube.com/watch?v=Vwg1CBhjhfE

Leave a Comment