தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே
தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே

ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்
வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்
தேடி வந்து அன்பை பொழிந்தீரே
உம் கரங்களினால் அணைத்து கொண்டீரே

தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்
துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்
உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரே
உம் கிருபையினால் காத்துக்கொண்டீரே

இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்
மனிதர் பேசும் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தேன்
என்னை குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீரே
உம் சிங்காசனத்தில் அமரவைத்தீரே

Leave a Comment