நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை-2

1.கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே

2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-என் சீயோனே

3.எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
இனி நீ தீங்கை காண்பதில்லையே-என் சீயோனே

Leave a Comment