ஒரு வரம் நான் கேட்கின்றேன்
திருப்பதம் நான் பணிகின்றேன்
மனிதனாக முழு மனிதனாக
வாழும் வரம் நான் கேட்கின்றேன்
1. நிறையுண்டு என்னில் குறையுண்டு
நிலவின் ஒளியிலும் இருளுண்டு
புகழுண்டு என்றும் இகழ்வுண்டு
இமய உயர்விலும் தாழ்வுண்டு
மாற்ற இயல்வதை மாற்றவும்
அதற்குமேல் அதை ஏற்கவும்
உனது அருள்தந்து மனித
நிலைநின்று வாழ வரம் தருவாய்
2. உறவுண்டு அதில் உயர்வுண்டு
இணைந்த தோள்களில் உரமுண்டு
இல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டு
இதழ்கள் இணைந்தால் மலருண்டு
மகிழ்வாரோடு நான் மகிழவும்
வருந்துவாருடன் வருந்தவும்
உனது அருள் தந்து மனித
நிலை நின்று வாழ வரம் தருவாய்