ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?
நீ இயேச தேடி வரமாட்டியா?-2
மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2
நீ இயேசு கிட்ட வரமாட்டியா?
உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2

1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரே
பாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமே
ஆத்துமாவை மீட்டெடுக்க
சிலுவையில் மாண்டாரே
பாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே

மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2
நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்
பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்
மகிமையான சீயோனிலே
மகிமையாக நீ வாழ்ந்திடுவாய்

2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்
தேடுகின்ற மனிதனே உன்
ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா
சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையே
ஆத்துமாவை தந்த தேவனிடத்திற்கு திரும்பிடு

மனிதா மனிதா நீ மனம் தரும்பிடு-2
நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்
பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்
மகிமையான சீயோனிலே
மகிமையாக நீ வாழ்ந்திடுவாய்.

Leave a Comment