Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

D maj
அங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்
நிம்மதி கிடைக்கல
இரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்
சுகத்தை ருசிக்கல-2

திரை கடல் ஓடினேன்
திரவியம் தேடினேன்-2
தோல்வி ஒன்று தான் நிரந்தரமாக
என் வாழ்வை பிடித்ததே-2

1.தொட்டதும் தொலங்கல
(என்) காரியம் வாய்க்கல-2
பாவத்தின் தழும்புகள்
நெஞ்சினை உலுக்குதே
சாபத்தின் ரோகங்கள்
வாழ்வினை வாட்டுதே
என் நேசரின் இரத்தத்தால்
மீட்பை பெற்றிட
பாவ சாபங்கள் என்னிலே
ஒழிந்து போய்விட
அவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2

2.தானியேல் போல நான்
ஜெபித்திடவில்லையே
தாவீதை போல் நான்
துதி பாடிடவில்லையே
ஜெபவீரனாய் மாறிட
ஆவியை தாருமே
துதி பலிகளை செலுத்திட
கிருபையை தாருமே
என் நேசரே உமக்காகவே
எனை வாழ்ந்திட செய்யுமே
கோடி ஜனங்களை நான் உமக்காகவே
திருப்பிட செய்யுமே
எனக்குள்ளே நீர் வாருமே-2

உயிரே நீர் வாருமே
வல்லமை நீர் தாருமே
உயிரே வாருமே
வல்லமை தாருமே
வாருமே எனக்குள் வாருமே
தாருமே உம் பெலன் தாருமே-2

 

Leave a Comment