Paatham ontrae vendum – பாதம் ஒன்றே வேண்டும்

உன் பாதம் ஒன்றே வேண்டும்
பல்லவி
பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
சரணங்கள்
1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம்
2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம்
3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம்
5. நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன் – பாதம்
6. பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் – பாதம்

Leave a Comment