வேதப்பகுதி :நியாயாதிபதிகள் : 1-10.
- யோசுவா மரித்த பின் கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் புறப்படக்கடவன்??
விடை: நியாயாதி: 1: 1,2.
- கானானியரில் யாரை யூதா கோத்திரத்தார் வெட்டிப் போட்டார்கள்??
விடை: நியாயாதி: 1:10.
- யூதா எந்த பட்டணங்களை பிடித்தான்??
விடை: நியாயாதி: 1:18.
- யாருடைய கைகால்களின் பெருவிரல்களை தறித்தனர்??
விடை: நியாயாதி: 1:6.
- ஆசேர் கோத்திரத்தார் யாரை துரத்திவிடவில்லை??
விடை: நியாயாதி: 1: 31.
- யூதா கானானியரை சங்காரம் பண்ணி அந்த பட்டணத்திற்கு என்ன பெயரிட்டனர்??
விடை: நியாயாதி: 1: 17.
- உன் சுதந்திர பங்குவீதத்தில் நானும் உன்னோடு வருவேன் என கூறியது யார்??
விடை: நியாயாதி: 1:3.
- முற்காலத்தில் தெபீருக்கு என்ன பெயர்??
விடை: நியாயாதி: 1: 11.
- கர்த்தருடைய தூதன் எங்கிருந்து எங்கு வந்தார்??
விடை: நியாயாதி: 2:1.
- இஸ்ரவேலின் சந்ததியாரும்,அதற்குமுன் யுத்தம் அறியாதவர்களும், அவைகளை அறியவும் பழக்குவிப்பதற்கும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யார் யார்??
விடை: நியாயாதி: 3: 2,3.
- பெலிஸ்தரில்600 பேரை ஒரு தாற்றுக்கோலால் அடித்தவன் யார்??
விடை: நியாயாதி: 3:31.
- இடதுகை பழக்கமுள்ளவன் யார்??
விடை: நியாயாதி: 3:15.
- மெசொப்பொத்தேமிய ராஜாவின் பெயர் என்ன??
விடை: நியாயாதி: 3: 8.
- ஒத்னியேல் யார்??
விடை: நியாயாதி: 3:9.
- மிகவும் ஸ்தூலித்திருந்த மனுஷன் யார்??
விடை: நியாயாதி: 3: 17.
- தெபொராளின் கணவன் பெயர் என்ன??
விடை: நியாயாதி: 4:4.
- யாருக்கு900 இருப்பு ரதங்கள் இருந்தது??
விடை: நியாயாதி: 4: 13.
- சிசெராவையும் ரதங்களையும் கர்த்தர் யாருக்கு முன்பு கலங்கடித்தார்??
விடை: நியாயாதி: 4: 15.
- என்னோடேகூட வராவிட்டால்,நான் போக மாட்டேன் என யார் யாரிடம் சொல்லியது??
விடை: நியாயாதி: 4:7,8
- தண்ணீர் கேட்டவனுக்கு பால் கொடுத்தது யார்??
விடை: நியாயாதி: 4:18,19.
- பாராக்கின் தந்தை பெயர் என்ன??
விடை: நியாயாதி: 4: 6.
- மரணத்திற்கு துணிந்து நின்றவர்கள் யார்??
விடை: நியாயாதி: 5: 18.
- யார் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின??
விடை: நியாயாதி: 5: 7.
- ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்??
விடை: நியாயாதி: 5:24.
- கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் எப்படி இருப்பார்கள்??
விடை: நியாயாதி: 5:31.
- யுத்தம் செய்து,பாடி முடித்தபோது தேசம் எத்தனை வருடம் அமைதலாயிருந்தது??
விடை: நியாயாதி: 5:31.
- யாரிடம் பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என தூதன் கூறினார்??
விடை: நியாயாதி: 6:11,12.
- கிதியோன் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன??
விடை: நியாயாதி: 6: 24.
- குடாக்களில் தாபரித்தவர்கள் யார்??
விடை: நியாயாதி: 5: 17.
- மீதியானியரின் இரண்டு அதிபதிகள் யார்,யார்??
விடை: நியாயாதி: 7:25.
- நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணும்போது எங்களை அழைக்கவில்லை என யார்,யாரிடம் சொன்னது??
விடை: நியாயாதி: 8:1.
- நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன் என சொல்லியவர் யார்??
விடை: நியாயாதி: 6: 15.
- கிதியோன் பலிபீடத்தை எங்கே கட்டினார்??
விடை: நியாயாதி: 6:24.
- யெருபாகால் என கிதியோனுக்கு எதினால் பேரிடப்பட்டது??
விடை: நியாயாதி: 6:32.
- நானோ என் குமாரனோ உங்களை ஆளமாட்டோம்,கர்த்தரே உங்களை ஆளுவார் என கிதியோன் யாரிடம் கூறினார்??
விடை: நியாயாதி: 8:22,23.
- யாருக்கு நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப் பண்ணினார்??
விடை: நியாயாதி: 9: 23.
- தன் சகோதரரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தவன் யார்??
விடை: நியாயாதி: 9: 5.
38.ஒளிந்திருந்து தப்பிய யெருபாகாலின் குமாரன் யார்??
விடை: நியாயாதி: 9: 5.
- யார்,யாருடைய தலைகளை கிதியோனிடம் கொண்டு வந்தார்கள்??
விடை: நியாயாதி: 7:25.
- ராஜாவான வேலைக்காரியின் மகன் யார்??
விடை: நியாயாதி: 9:17.
- எது கிதியோனுக்கு கண்ணியாயிற்று??
விடை: நியாயாதி: 8:27.
- கிதியோனின் கர்ப்பப் பிறப்பு எத்தனைபேர்??
விடை: நியாயாதி: 8: 30.
- இஸ்ரவேலர் யாரை நினையாமலும் நன்மை பாராட்டாமலும் போனார்கள்??
விடை: நியாயாதி: 8: 34,35.
- பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தவன் யார்??
விடை: நியாயாதி: 8: 20.
- இஸ்ரவேலர் பாகால்களை பின்பற்றி எதை தேவனாக வைத்தனர்??
விடை: நியாயாதி: 8: 33.
- மலைகளின் உச்சியில் பதிவிருக்கிறவர்களை வைத்தவர்கள் யார்??
விடை: நியாயாதி: 9: 25.
- எது,என் ரசத்தை விட்டு மரங்களை அரசாளப் போவேனோ என்றது??
விடை: நியாயாதி: 9: 13.
- பட்டணத்தை இடித்து அதில் உப்பை விதைத்தவன் யார்??
விடை: நியாயாதி: 9: 45.
- யாருடைய சாபம் அவர்களுக்கு பலித்தது??
விடை: நியாயாதி: 9: 57.
- 30கழுதைக்குட்டிகள் மேல் ஏறும்30 குமாரர் யாருக்கு இருந்தனர்??
விடை: நியாயாதி: 10: 3,4.
- பூவாவின் குமாரன் யார்??
விடை: நியாயாதி: 10:1.
- யார் கீலேயாத் குடிகளுக்கு தலைவனாயிருப்பான்??
விடை: நியாயாதி: 10: 18.
- யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி??
விடை: நியாயாதி: 5: 15.
- யாரை கர்த்தர் இஸ்ரவேலர் முன்பாக தாழ்த்தினார்??
விடை: நியாயாதி: 4: 23.
- கிதியோன் மீது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினபோது அவன் யாரை தனக்கு பின் செல்லும்படி செய்தான்??
விடை: நியாயாதி: 6: 34