1. தேவனுடைய வீட்டில் உண்மையுள்ளவன் யார்?
2. ஆவியின் கனி எதில் விளங்கும்?
3. கர்த்தர் அவனவன் நீதிக்கும் ——– பலனளிப்பார்
4. யாருடைய இருதயத்தை உண்மையுள்ளதாக கண்டார்?
5. உள்ளத்தில் ———– விரும்புகிறீர்
6. மரணபரியந்தம் உண்மையாயிருக்கிறவனுக்கு தேவன் தருவது என்ன?
7. ——– ——– என்னும் புளிப்பில்லா அப்பத்தோடு பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்
8. இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்தது யார்?
9. ————- உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியம்.
10.உண்மையுள்ளவனாய் இருந்ததால், என் மேல் சுமத்த குற்றமும் குறைவும் இல்லை. நான் யார்?
11. யார் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்?
12. ——— காரியத்தை அடக்குகிறான்
13. அவனவன் பிறனோடே ——- பேசுங்கள்
14. ————– நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்
15. அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ——— ———- அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்
16. ————- ஸ்தானாபதியோ ஒளஷதம்
17. …. நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் ——- ——- உள்ளவராயிருக்கிறார்
18. எசேக்கியா தேவனுக்கு முன்பாக ——- ——- நடந்தான்
19. ———— மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்
20. ——— தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.