அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

பல்லவி
அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்
அனுபல்லவி
சற்றாகிலும் கிருபை பெற
முற்று மபாத்திரனான போதும்
சரணங்கள்
1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்
பலவித மாமிச சிந்தைகளும்
பாவி என்னிதயத்தை வதைத்தபோது
பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற்
2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு
வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;
நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்
மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற்
3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு
துன்மார்க்கப் பாதையில் தாம் நடந்து
வேதப் புரட்டாய்த் திரிந்தவரின்
ஓதுதல் கேட்டு நான் கெட்டலைந்தேன் – அற்
4. நான் செய்த தீவினையுணர்ந்து எந்தன்
வான பிதாவண்டை ஓடி வந்து
மெய் மனஸ்தாப அழுகையுடன்
ஐயனே! இரட்சியும் என்றவுடன் – அற்
5. இந்த மா இரட்சையை நம்பாயோ நீ?
வந்து பார் மீட்பரின் சிலுவையண்டை!
ஓடுகின்ற இந்த சிவந்த நதி
தேடி வருவோர்க்கு உயிரைத் தரும் – அற்

Leave a Comment Cancel Reply

Exit mobile version