Geethangalum keerthanaigalum

உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார் […]

உன்னதம் ஆழம் எங்கேயும் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Read More »

ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர்

ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Exit mobile version