Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Lyrics
ஜெயித்து விட்டார் மரணத்தை
விழுங்கி விட்டார் சாவினை
எழுந்து விட்டார் ஜீவனோடே
வென்று விட்டார் பாவத்தை
கொன்று விட்டார் சாபத்தை
உயிர்த்து விட்டார் என்றென்றுமே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம்

ஒடித்து விட்டார் சாவின் கூர்
ஜெயித்து விட்டார் நரகத்தை
முடித்துவிட்டார் கிரியைதனை
தந்து விட்டார் ரட்சிப்பை
சென்று விட்டார் பரலோகம்
அமர்ந்து விட்டார் தேவனோடே

ஆர்ப்பரித்து ஆடுவோம்
மகிழ்ச்சியோடே பாடுவோம்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
எங்கும் சொல்வோம் நற்செய்தி
கொண்டு செல்வோம் சுவிசேஷம்
இயேசு நாமம் போற்றிடுவோம்


Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar by Sujatha Selwyn

Leave a Comment