இயேசு நம்மோடு இன்று – Yesu Nammodu lyrics

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே

1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளி நாமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணி போல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்

Leave a Comment