வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
செழிப்பை உண்டாக்கும் தண்ணீர்
தடாகமும் நீரே
எந்தனின் கோட்டையும் நீரே
எந்தனின் வெளிச்சமும் நீரே

நீரே நல்லவர், நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர்

1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
மறு உத்தரவு எனக்களிப்பீர்
நீரே நல்லவர் நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர்

2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே
நீர் சர்வ வல்லவரே
நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர்
நீரே மாறாதவர் நீரே பாத்திரர்

3.உமது தயவு எனக்கு வேண்டுமே
உமது கிருபை எனக்கு போதுமே
நீரே என் அரண் நீரே என் பெலன்
நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்

4.ஒத்தாசை வரும் பர்வதம் நீரே
அடைக்கலமானவர் நீரே
யெகோவாயீரே, யெகோவா ஷம்மா
யெகோவாரூவா, யெகோவா ரப்பா

5.உதவி வரும் கன்மலை நீரே
எனக்கு போதுமானவர் நீர்
மகிமை நிறைந்தவர்
மாட்சிமை உடையவர்
வல்லமை நிறைந்தவர்
உலகை ஆள்பவர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version