Aasathan Enakku Aasai Rombathan Lyrics

ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான்
இயேசுவே உம்மோடு பேசதான்
மரியாள் போல பாதம் அமர்ந்து
மகிழ்ந்து பேச ஆசைதான்
மழலை போல நானும் மாறி
உம் மடியில் தவள ஆசைதான்
இப்ப நானும் தைலமாகி உமது
பாதம் கழுவ ஆசைதான்
கல்யாண வீட்டில் திராட்சைரசமாய்
உம் கரத்தில் மாறிட ஆசைதான்
கல்வாரி சிலுவையின் கோலத்தில்
உமது காயமாய் மாறிட ஆசைதான்
ஆசைதான் ரொம்ப ஆசைதான்
ஆண்டவர் என் இயேசுதான் (2)
அவர் அணிந்த அந்த ஆடைக்குள்ளே
நூலாய் வாழ ஆசைதான்
கழுதை போலவே நானும் உம்மையே
சுமந்து செல்லதான் ஆசைதான்
கட்டளை தந்தால் நானும்
உமது காலணியாகவும் ஆசைதான்
ஆசைதான் ரொம்ப ஆசைதான்
ஆண்டவர் என் இயேசுதான்
அவர் கைகள் வைத்து ஆசிர்வதித்த
ஆப்பம் ஆக ஆசைதான்

Leave a Comment