சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல் தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு
2. விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது
3. கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்