அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா!

2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்?
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!

3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்

4. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்

5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
முன்குறித்தாரே பிறக்குமுன்னே
சகலமும் நன்மைக்கே
நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்

Leave a Comment