கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal
கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார்