Songs List

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum.

எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப் 2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப் 3. உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப் 4. இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நாயகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum. Read More »

ஆவலாய் இருக்கின்றார் – Aavalaai Irukkinraar

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார்-நீதி 2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள்கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் நீதி 3.வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்வழிதவறி நாம் நடந்து சென்றாலும்இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – நீதி

ஆவலாய் இருக்கின்றார் – Aavalaai Irukkinraar Read More »

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae

அசட்டை பண்ணாதேஅவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்தியவெளிச்சம் நீ – அசட்டை 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதேஅசதியாயிராதே-அசட்டை 2 .திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் ஊற்றுஅது நதியாய் பாய்ந்திடும் 3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)வேகமாய் வருவார்கள்-உன்(உன்) கண்கள் அதைக் காணும்(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae Read More »

உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean

உம்மை தான் நான் பார்க்கின்றேன்பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) 1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்)செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் – அவமானம் 2. உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் 3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர்

உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean Read More »

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean

இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் அதிகமாய்திருவசனம் தியானம் செய்துஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாதுஇறை அமைதி என்னை காக்கும்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 2. என் சார்பில் இருக்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன்எதிராக செயல்படுவோர்திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் 3. சாவினின்று என் உயிரைமீட்டீரே கிருபையினால்உம்மோடு நடந்திடுவேன்உயிர்வாழும் நாட்களெல்லாம் 4. துயரங்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்கண்ணீரைத் தோற்பையில்சேர்த்து வைத்துப் பதில் தருவீர் 5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்செலுத்துகிறேன் நன்றி

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean Read More »

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு – என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள் மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விடஆயிரமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகெங்கும் ஒளி வீசுவேன்

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Read More »

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Read More »

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம்

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Read More »

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனுதகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2 1. கர்த்தருக்கு பயந்துவழிகளில் நடக்கின்ற நீபாக்கியவான் பாக்கியவான்உழைப்பின் பயனை நீஉண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின் 2.நன்மையும் பாக்கியமும்உன் வாழ்வில் நீ காண்பாய்செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின் 3.இல்லத்தில் உன் மனைவிகனிதரும் திராட்சை செடிபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பதுநிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின்

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Read More »

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே மீட்டுக் கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும் 2.எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது Bridge: உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே-நெஞ்சே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Read More »

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar

கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார் மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில்அல்லேலூயா (4)அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர் 1. கர்த்தர் என் பட்சத்தில்இருப்பதால் பயப்படேன்மனிதன் எனக்கு எதிராய்என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல் 2.இந்த நாள் நல்ல நாள்யேகோவா தந்த நாள்களிகூர்ந்து மகிழ்ந்திடுகாரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல் 3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்எனை சூழ்ந்து வந்தாலும்நெருப்பிலிட்ட முட்கள் போல்சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல் 4. கர்த்தரின் வலக்கரம்மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றார்வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல் 5.

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar Read More »

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம்உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை 2. பட்டப்பகல் போலஎன் நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன்-உம்மை 3. பாதத்தில் வைத்துவிட்டேன்என் பாரங்கள் கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை 4. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன்

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum Read More »