Daily Tamil Bible verse

12. உன் வார்த்தைகளின்படி செய்தேன்;
ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்;
இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை,
உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

13. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்;
உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

14. உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல,
நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு,
என் வழிகளில் நடப்பாயாகில்,
உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.

Behold, I have done according to thy words:
lo, I have given thee a wise and an understanding heart;
so that there was none like thee before thee,
neither after thee shall any arise like unto thee.

And I have also given thee that which thou hast not asked, both riches,
and honour: so that there shall not be any among the kings like unto thee all thy days.

And if thou wilt walk in my ways,
to keep my statutes and my commandments,
as thy father David did walk,
then I will lengthen thy days.

I இராஜாக்கள் I:Kings :3-12-14✝️

#PraiseToGod
#BlessingSunday

9. நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?
பலங்கொண்டு திடமனதாயிரு;
திகையாதே,
கலங்காதே,
நீ போகும் இடமெல்லாம்
உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

Have not I commanded thee?
Be strong and of a good courage;
be not afraid,
neither be thou dismayed:
for the LORD thy God is with thee
whithersoever thou goest.

Joshua: யோசுவா:1

  1.  

14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
Ye are my friends, if ye do whatsoever I command you.

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
Henceforth I call you not servants; for the servant knoweth not what his lord doeth: but I have called you friends; for all things that I have heard of my Father I have made known unto you.

யோவான்:John:15:15✝️

What a Friend we have in Jesus ! ?

17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும்,
பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும்,
இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும்,
பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

18. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே
சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

But the wisdom that is from above is first pure,
then peaceable, gentle,
and easy to be entreated,
full of mercy and good fruits,
without partiality,
and without hypocrisy.

And the fruit of righteousness is sown in
peace of them that make peace.

யாக்கோபு: James :3: 17& 18✝️

21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

And she shall bring forth a son, and thou shalt call his name JESUS: for he shall save his people from their sins.Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying,

மத்தேயு : Matthew:1:21,22