En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
செய்யும் சுத்தம்!
என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
செய்யும் சுத்தம்!
முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்
அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்
நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்
செய்யும் சுத்தம்!

2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும்
செய்யும் சுத்தம்!
லோக மாம்ச பாசக் கறையினின்றும்
செய்யும் சுத்தம்!
மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்
மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன்
லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன்
செய்யும் சுத்தம்!

3. வாதிக்கும் பாவத் துக்கத்தினின்று
செய்யும் சுத்தம்!
நாசத்தைக் காட்டும் பயத்தினின்று
செய்யும் சுத்தம்!
மீட்பரே! உம்மால் நான் கழுவப்பட
பிள்ளைபோல் நம்பி என் கையை நீட்ட
துணிந்து நீர் என்னை சுத்தி செய்ய
கெஞ்சுகிறேன்!

4. லோகத்தார் வீம்புக் கஞ்சாதபடி
செய்யும் சுத்தம்!
பயமின்றி உம்மைப் போற்றும்படி
செய்யும் சுத்தம்!
உம்மை நான் சேர்ந்தவன் என்றறிய
என்னைப் பலப்படுத்தி நீர் ஆள
சோதனை நாளில் நான் கீதம் பாட
செய்யும் சுத்தம்!

Leave a Comment Cancel Reply

Exit mobile version