Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும்

பல்லவி
என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.
அனுபல்லவி
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே. – என்
சரணங்கள்
1.அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ? – என்
2.மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே – என்
3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய். – என்
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக்
கண்டேன் தேசம் எங்கும்
சுற்றிப் பார்த்தும் – தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும்
பொய்யாமோ? – என்
5.தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் – அதை
ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென்ன
நினைக்கு? – என்
6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப்
பார்க்கிலும் தேவை நினக்
கொன்றும் இல்லையே. – என்

Leave a Comment Cancel Reply

Exit mobile version