Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம்,
நீர் தயாமூர்த்தியே;
நின் பாதத் தூளும் மேலிடும்
நிர்ப்பந்த நீசனே.
2.எப்பாவம் வெட்கம் எட்டிடா
ஏகாந்த ஜோதியே,
எம் பாவம் நிந்தை தாங்கினீர்;
என் சொல்வேன் அன்பையே!
3.பிதாவின் மாட்சி ஆசனம்
அபாத்திர பாவிக்காய்
சுதா, நீர் நீத்து மாந்தர் தம்
சரீரம் எடுத்தீர்.
4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்
சகித்தீர் சாந்தமாய்;
ஐயா, எந்நாமம் சாற்ற உம்
பொறுமை தூய்மைக்கே!
5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர்
என் அன்பைப் பெற்றிட;
நான் பாவி, தோஷி, வெட்கத்தால்
முன்னிற்கத் துணியேன்.
6.உம் தயை அன்பால் மட்டுமே
நான் பாத்திரன் ஆயினேன்;
உன் தாசர் காக்கும் வண்ணமே
காப்பீர் நீர் என்னையும்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version