Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர்
ஸ்வாமி, அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக் கழைத்தீர்,
நான் உலகை எத்தனை தழுவினாலும்,
பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான்
அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.
2. இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால், கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்
அகப்படப் பண்ணுவர், அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.
3. இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே,
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து, தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்த்தால், மனத்தில் பூரித்தாளே.
4. நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே, என் இயேசுவே,
அண்டிக்கொண்டேன், நீர் என்னோடே
ஐக்யமாகும், ஜீவனே
பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன், உமக்குள் யாவும் உண்டே.
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.
5. ஞானத்தின் எல்லா நிறைவும்
உம்மில் இருக்கின்றது;
கீழ்ப்படிகிற இசையும்
ஞானங் கற்கிறதற்குத்
தாழ்வாகிய சிந்தையும் என்ல் உண்டாக
நீர் எனக் கொத்தாசையைப் பண்ணுவீராக.
நன்றாக நான் உம்மையே கற்றுக்கொண்டே
அறிந்தால், நான் தேறின ஞானியாமே.
6. உம்மை மாத்திரம் முன்னிட்டுக்
கர்த்தரை நான் சேரலாம்;
சிலுவையிலே மரித்து
ரத்தஞ் சித்தின நீர்தாம்
என் நித்திய நீதி; இதன்றி அடியேன்
ரட்சிப்பை அடைய வேறொன்றும் அறியேன்;
உம்மண்டை ஒதுங்கின பாவியை நீர்
வெண் வஸ்திரத்தாலே அலங்கரித்தீர்.
7. நான் தெய்வீகச் சாயலான
புதுச் சிஷ்டியாக, நீர்
என்னைப் பரிசுத்தமான
மனிதனுமாக்குவீர்.
நீர் அதற்குமாகக் கொடுக்கப் பட்டோரே,
நீர் அதற்குச் சகல ஈவுமுள்ளோரே.
நீர் என்னை அழிந்துபோம் இச்சைக்கெல்லாம்
விலக்கிக் காப்பாற்றும், என் ஜீவன் நீர் தாம்.
8. தேவரீரின் மீட்பினாலே
மா பூரிப்பாகின்றது;
உம்முடைய ரத்தத்தாலே
ஓர் முறை பரத்துக்கு
நீர் உட்பிரவேசித்து, நித்தியமான,
ரட்சிப்பை உண்டாக்கிப் பிசாசுக்குண்டான
பலத்தை முறித்தால் நீங்கலானேன்,
கர்த்தாவை அப்பா என்றும் தொழுகிறேன்.
9. இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்கிற்று.
உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.
10. ஆகையாலே நான் தெரிந்து,
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும், இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
என் கால்களை மோட்ச வழியிலே காரும்.
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டெ
இருக்குவும்; மற்றது குப்பையாமே.

Leave a Comment Cancel Reply

Exit mobile version