ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu

ஒருநாளும் வீணாகாது
நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒரு நாளும் வீணாகாது

1. கர்த்தரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார்
அவர் விருப்பம் நீ செய்திட
ஆற்றல் தருகின்றார்

தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே
பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும்

2.பிடித்துக் கொள் ஜீவவசனம்
பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில்
நீதானே நட்சத்திரம்-தொடர்ந்து

3.அவமானம் நிந்தை எல்லாம்
அனுதின உணவு போல
பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்
பெலன் தரும் ஊட்டச்சத்து-தொடர்ந்து

4. கண்களை பதித்துவிடு
கர்த்தராம் இயேசுவின் மேல்
சிலுவை சுமந்ததனால்
சிங்காசனம் அமர்ந்து விட்டால்- தொடர்ந்து

Leave a Comment