Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பல்லவி
பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,
ஜீவன் நீர் விட்டதற்காய்?
அனுபல்லவி
தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி
சரணங்கள்
1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர் தர‌
பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி
2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?
சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் – பாவி
3.வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைப்ட்டெண்ணம் அற்றீர்
சீரா மனுடவ தாரா சருவாததி
காரா பரம குமாரா ஓலோலமே! – பாவி
4.வாதை உமக்கெதினால் உண்டாயிற்று? மானிடர்
பாவத்தினால்
வேதம் நிறைவுறு ஆதி பவம் அற‌
நீதி தரும் யேசு நாத சுவாமியே –பாவி
5.குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பர்
கொற்ற வர்க்கும் கல்விம் கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே –பாவி

Leave a Comment Cancel Reply

Exit mobile version