choir songs

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை […]

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Read More »

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும் துதியும் உண்டாகவும்தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும் Bakthare

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர்

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics Read More »

Exit mobile version