Tamil Bible Vidukathai

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  :  உப்பு
தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?  :அன்பு
யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? : இரட்சிப்பு
இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்? ஈசாயென்னும் அடிமரம்
பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார் ? யோயாக்கீம்

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?

யோசுவா 3:16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்

தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?

அன்பு : ரோமர் 8:28 :அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ?

சங்கீதம் 3:8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.
யோனா 2:9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்?

ஏசாயா 11:1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார்

II இராஜாக்கள் 24:1 அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
II இராஜாக்கள் 23:36 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version