எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே