YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS
இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
நேசரே உம்மை போற்றுவேன்
உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
என்றும் பாடிடுவேன்
1. பாவத்தை போக்க பலியாக வந்த
பரனே உம்மைப் பாடுவேன்
பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
பரமனே உம்மை பாடுவேன்
பாரினில் வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்
2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
உம்மையே நான் பாடுவேன்
சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
யேசுவே உம்மை பாடுவேன்
சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
தேவனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்
3. தேவகுமாரா தேற்றரவாளனே
உம்மையே நான் பாடுவேன்
ஆறுதல் தந்து என்னை தேற்றி
மார்புடனே இருப்பவரே
தேடி வந்த தேவ சுதனே
தன்னையே தந்த தேவாதி தேவா
தினமும் உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்