பல்லவி
இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே
இரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயா
இரட்சகரைப் போற்றுவோம்
இன்பக் கீதம் பாடுவோம்
நூற்றாண்டு கொண்டாடுவோம்
சரணங்கள்
1.மேய்ப்பன் ஆடு போல் – முன்னோர்
வழிதப்பிக் கெட்டலைந்தார்
அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்து
அன்பு காட்டி – அன்னமூட்டி
ஆதரித்தாரே
2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம்
முன்னோர்களனுபவித்த
பொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிட
சேனை தளகர்த்தனாக
பூத் டக்கர் வந்தார்
3.பேய் பிசாசை தெய்வமென்று – நம்பி
ஆடு கோழி பலி செலுத்தி
மதியைக் கெடுத்திடும் மதுபானமருந்தி
சேற்றிலே புரண்டவரை
தூக்கி இரட்சித்தார்
4.எண்ணெழுத் தறியாதோர்களின்
கண்களைத் திறக்க வந்தார்
ஆடை அனைவருக்கும், அன்புடனுடுத்தி
ஊணுடை, உறைவிடம்
தந்திட வந்தார்