எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே (2)

உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன் (2)

1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு

2.பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

Leave a Comment