சரணங்கள்
1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை
தரிசித் தென் னகந்தனில் தங்குவையே!
2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே!
ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்!
3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே!
இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்!
4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியே
தன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே!
5. ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும்
நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்!