வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam

வாக்குத்தத்தம் என் மேல
ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2
கூட நிக்கும் கூட்டம் எல்லாம்
நாளாக நாளாக மாறும்
அப்பா தந்த வாக்குத்தத்தம்
நாளானாலும் கையில் சேரும்

ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு
என் பக்கத்துல அல்லேலூயா
அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு
எதுவும் இல்ல அல்லேலூயா-2

1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம்
Family யா எதிர்த்தாங்க மொத்தமும்-2
எந்த சொப்பனம் கீழ தள்ளுச்சோ
அதை வச்சே தூக்கினாரு மேல
கீழ எறிஞ்சா கையில புடிச்சி
தூக்குறதே அப்பாவோட வேல
அட எந்த சொப்பனம் உன்னை கீழ தள்ளுச்சோ
அதை வச்சே தூக்குவாரு மேல
கீழ எறிஞ்சா கையில புடிச்சி
தூக்குறதே அப்பாவோட வேல-ஒரு யூத

வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும்போது
வாக்குத்தத்தம் இருக்கிறவன் எப்பவும் Kingu

2.எரிகிற சூளை என்ன ஆச்சு
எறிய வந்த கூட்டம் எரிஞ்சுபோச்சு-2
வேகும் தீயில என்னை எறிஞ்சும்
முடிகூட கருகாம போச்சு
தூக்கி எறிய வந்தவனெல்லாம்
தூக்குவதே அப்பாவோட Sketchu-2

ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு
என் பக்கத்துல அல்லேலூயா
அவர் சரித்திரத்தில் முடியாதுன்னு
எதுவும் இல்ல அல்லேலூயா
ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு
என் பக்கத்துல அல்லேலூயா
அவர் சத்தம் கேட்டா பாதாளமே
கொலை நடுங்கும் அல்லேலூயா

Leave a Comment Cancel Reply

Exit mobile version