அன்பின் உருவம் ஆண்டவர் – Anbin Uruvam Aandavar lyrics

அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா
கண் கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
1. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
2. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே
3. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பி வா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா
4. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் முழுவதும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா

Leave a Comment