அப்பா உம் பாதம் – Appa Um Paatham

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்

இயேசையா(4)

1) துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

2) கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

3) என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

4) முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா

இயேசையா நன்றி(4)

Leave a Comment Cancel Reply

Exit mobile version