ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் (2)
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

Leave a Comment