ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai

சரணங்கள்
1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என்
கைகளைக் கழுவிடாதோ
2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என்
கால்களைக் கழுவிடாதோ
3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணினதோ
நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என்
சிரசதை கழுவிடாதோ
4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் இதயம் இழைத்ததுவோ
உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என்
இதயத்தை கழுவிடாதோ

Leave a Comment