கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலா
உன்னை தாலாட்ட யாருமில்லை
உன்னை தாலாட்ட யாருமில்லை ஓ
தாலாட்ட யாருமில்லை
கண்மணியே தூங்கு பாலா
உன்னை தாலாட்ட யாருமில்லை
உன்னை தாலாட்ட யாருமில்லை

குளிரில் நடுங்கும் குளிரில்
கொட்டும் பனியிலும்
எம்மை உயர்ந்தவராக்கிட
எடுத்த கோலம் இதுவன்றோ

மலர்கள் மணத்தை வீச
மன்னா நீர் உதித்தீரே
மக்கள் மகிழ்ந்து போற்றிட
மன்னா உம்மை துதிப்பேன் நான்

கிழக்கில் நட்சத்திரம் தோன்ற
சாஸ்திரிகள் மகிழ்ந்திட
பொன் போளம் தூபமும்
காணிக்கை படைத்து பணிந்தனர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version