தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி

பல்லவி
தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி
தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ
சரணங்கள்
1. நித்திய ஜீவநதி நீரே யாயினும்
நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக
2. கடற்காளானின் கடும் காடியோ உமக்
கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக
3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட
ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக
4. தேவ வசன ஞான திவ்விய பாலில்
தேட்டமாய் நானும் என்றும் உண்டு பருக – தாக
5. உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள – தாக

Leave a Comment