நல்ல நாளிது நல்ல நாளிது
பாலன் பிறந்த நாள் 
இந்த பூமியில் இந்த பூமியில் 
தேவன் உதித்த நாள் மரி மடியில் 
மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் 
எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே
இனிய உறவுகள் இதய நினைவுகள் 
இனிமை காணும் நேரம் 
புதிய பாதைகள் புதிய பயணங்கள் 
எம்மில் தொடரும் நேரம் 
இந்த பூமியில் அவதரித்தார் 
நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் 
கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே
வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் 
உதயமாகும் காலம் உண்மை வழியுமாய் 
நேர்மை சுடருமாய் புனிதமாகும் காலம் 
நல்தேவன் வந்துதித்தார் நம்மை கரங்களில் 
ஏந்திக்கொண்டார் தோல்விகள் இனி இல்லை 
எந்த நாளுமே ஆனந்தமே

