1. பூமிமீது ஊர்கள் தம்மில்
பெத்லெகேமே, சீர் பெற்றாய்,
உன்னில் நின்று விண்ணின் நாதர்
ஆள வந்தார் ராஜனாய்.
2. கர்த்தன் மனுடாவதாரம்
ஆன செய்தி பூமிக்கு
தெரிவித்த விண் நட்சத்திரம்
வெய்யோனிலும் அழகு.
3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்
காணிக்கை படைக்கிறார்;
வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,
பொன்னும் சமர்ப்பிக்கப் பார்;
4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,
பொன் நம் ராஜன் பகரும்;
வெள்ளைப்போளம் அவர் சாவை
தெரிவிக்கும் ரகசியம்.
5. புறஜாதியாரும் உம்மை
பணிந்தார்; அவ்வண்ணமே
இன்று உம் பிரசன்னம் நாங்கள்
ஆசரிப்போம், இயேசுவே.