என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்
கொடுக்கின்றேன் நான்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
பண்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்
அன்பரே உம்பாதம் தந்தேன்
பரிசுத்தமான ஆலயம் மாற்றி
என்னை நிரப்பும்
நீரன்றி என்னால் இப்பாவ உலகில்
ஏதும் நான் செய்திட இயலேன்
காப்பீரே உம் செட்டையின் கீழ்
வழுவாது என்னை நிறுத்தி